பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
Sri Lanka
Sri Lankan Peoples
By Harrish
நாட்டில் காற்றின் தரம் மிக மோசமடைந்து வருவதால் சுவாசிப்பது தொடர்பில் ஏற்படும் உடல் பிரச்சினைக்கு உடனடியாக மருத்துவரை நாடுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் சில பிரதேசங்களில் காற்றின் தரம் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மட்டத்தில் நிலவுவதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இரத்தினபுரி – கெடகன்கமுவ மற்றும் எல்பிட்டிய நகரில் காற்றின் தரம் சிறியளவு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மட்டத்தில் உள்ளதாக அந்த நிறுவகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காற்றின் தரம்
இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் காற்றின் தரம் நடுத்தர மட்டத்தில் நிலவுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் சில பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்குள் சிறிது ஆரோக்கியமற்றதாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்