வாகன சாரதிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
வாகன கண்ணாடிகளில் காட்டப்படும் பெயர் பலகைகள் மற்றும் பெயர்கள் குறித்த விதிகள் இனிவரும் காலங்களில் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.எஸ்.பி) மனோஜ் ரணகல இதனை தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சட்ட நடவடிக்கை
அதன்படி, வாகனத்தின் கண்ணாடிப் பகுதியில் ஐந்தில் ஒரு பங்கு வரை சூரிய ஒளி முகத்திற்கு படாமல் இருக்க டின்டட்(ஸ்டிக்கர்) ஒட்ட முடியும் என மனோஜ் ரணகல சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் அதைத் தவிர, வருவாய் உரிமம் மட்டுமே கண்ணாடியில் காட்டப்படவேண்டும் என அவர் கூறியுள்ளார்.
மேலும், அரசு அதிகாரிகள் மற்றும் பிறர் கண்ணாடிகளில் தங்கள் நிலைப்பாட்டைக் காண்பிப்பது குறித்து கேட்டபோது, சட்டம் அனைவருக்கும் சமமாகப் பொருந்தும் என்றும், மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரணகல வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
