அதிகாரிகளுக்கு ரணில் விடுத்துள்ள உடனடி பணிப்புரை
இலங்கையில் இந்திய முதலீட்டு
இலங்கையில் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இடையூறான சுற்றறிக்கைகளை உடனடியாக திருத்துமாறு அதிகாரிகளுக்கு அதிபர் ஆலோசனை விடுத்துள்ளார்.
முதலீடுகள் தொடர்பில் அதிபர் தலைமையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
இலங்கையில் முன்னெடுக்கப்படும் இந்திய முதலீட்டு அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல், அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அந்தக் கலந்துரையாடலில் இலங்கைக்கான இந்தியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் ஜேக்கப்பும் கலந்துகொண்டார்.
உடனடி தீர்வு வழங்க பணிப்புரை

இதன்போது, இந்திய முதலீட்டில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களுக்கு தடையாகவுள்ள விடயங்களை கண்டறிந்து, அவற்றுக்கு உடனடி தீர்வு வழங்குமாறு, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
கடந்த அரசாங்கங்களால் காலத்துக்கு காலம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் அபிவிருத்திக்கு இடையூறாக இருக்குமாயின் அவற்றை உடனடியாக திருத்த வேண்டியதன் அவசியத்தையும் அதிபர் ரணில் விக்ரமசிங்க இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
அதிபர் அலுவலகப் பிரதானி மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, மின்வலு, எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரன உள்ளிட்ட ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.