இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு
Central Bank of Sri Lanka
Economy of Sri Lanka
By Dhayani
கடந்த ஜனவரி மாதத்தில் வெளிநாட்டு பணியாளர்களினால், 487.6 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி, கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, 11.4 சதவீத அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த வருடம் ஜனவரி மாதம் 437.5 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு பணியாளர்களினால் அனுப்பப்பட்டுள்ளது.
அந்நிய செலாவணி அதிகரிப்பு
இதேவேளை, கடந்த ஜனவரி மாதத்தில், சுற்றுலாவினால் கிடைக்கப்பெற்ற வருமானம், 122 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதற்கமைய, 341.8 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணியாக பெறப்பட்டுள்ளது.
கடந்த வருடம் சுற்றுலா துறையின் ஊடாக 153.5 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 3 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி