சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்
Sri Lanka
Sri Lankan Peoples
By Harrish
நாட்டிலுள்ள சாரதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி, மலைப்பகுதிகளின் வீதிகளில் வாகனம் செலுத்தும் சாரதிகள் மிகவும் எச்சரிக்கையுடன் வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளரான மூத்த புவியியலாளர் வசந்த சேனாதீர கூறுகையில்,“ அண்மைய நாட்களில் மலைப்பகுதிகளில் தொடர்ச்சியான கனமழை பெய்து வருகின்றது.
மலைப்பகுதிகள்
இந்நிலையில், மலைப்பகுதிகளில் உள்ள முக்கிய வீதிகளில் பாறைகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுகின்றது.
எனவே மலைப்பகுதிகளில் உள்ள வீதிகளில் வாகனத்தை செலுத்தும் போது சாரதிகள் அவதானத்துடன் செயற்படுங்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்