புதிய மொந்தையில் பழைய கள் : ரணில் வழியில் நகரும் அநுர
புதிய மொந்தையில் பழைய கள் என்பது போல தற்போதைய அரசு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) வழியில் நகர்வதாக பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுசெயலாளர் ரவி சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “புதிய அரசு ரணில் விக்ரமசிங்க போல சாணக்கியமான முறையில் சர்வதேச மட்டத்தில் ஆட்சியை கையாளுகின்றது.
தற்போதைய அரசாங்கம் ஒரு போதும் தமிழ் மக்களுக்கான பொறுப்பு கூறல் விடயத்தில் நேர்மையாக நடத்துக்கொள்ளாது, உள்ளக பொறிமுறை ஊடாக மட்டும்தான் இந்த விடயத்தை நகர்த்தி செல்லும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் மக்களின் பொறுப்பு கூறல், தமிழ் மக்களுக்கான தீர்வு, தமிழ் மக்களின் விடயத்தில் தற்போதைய அரசின் தாக்கம் மற்றும் தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பில் அவர் தெரிவித்த விரவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்