இரத்ததானம் செய்பவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
நாட்டில் இரத்ததானம் செய்பவர்கள், குறிப்பிடப்பட்ட இரத்தத்தின் அளவை மீறி வழங்க கூடாதென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய இரத்த மாற்று நிலையத்தின் பணிப்பாளர் வைத்தியர். லக்ஷ்மன் (Lakshman) குறித்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
வெசாக் பண்டிகையின் போது இரத்ததான நிலையத்திற்கு இரத்ததானம் செய்வதற்கு அதிகளவானோர் வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரத்தம் தட்டுப்பாடு
இதனால், அதிக இரத்தம் கொடுக்கப்படும் போது, அதை சேமிப்பதில் சிரமம் ஏற்பட்டு வீணடிக்கப்படுகின்றது.
எனவே, இரத்ததான சிகிச்சை நிலையங்களில் தேவையான இரத்தத்தை மாத்திரம் பெற வேண்டுமென தேசிய இரத்த மாற்று நிலையத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த ஏப்ரலில் தேசிய இரத்த மாற்று நிலையத்தில் இரத்த தட்டுப்பாடு காணப்பட்ட போதிலும், தற்போது நிலைமை தணிந்து தேவையான அளவு இரத்தம் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |