திடீரென உடைந்து விழுந்த வெசாக் தோரணம்: இருவருக்கு காயம்
புதிய இணைப்பு
கம்பஹா (Gampaha) - மரதகஹமுல பகுதியில் வடிவமைக்கப்பட்டிருந்த வெசாக் தோரணமொன்று திடீரென உடைந்து வீழ்ந்ததில் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்று (22) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
பலத்த காற்றினால் இந்த வெசாக் தோரணம் உடைந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படடுள்ளது.
வெசாக் தோரணம்
ஐந்து நபர்கள் இணைந்து இந்த வெசாக் தோரணத்தை வடிவமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்களில் இருவர் தோரணத்தின் உச்சியில் ஏறி நின்றுகொண்டிருந்துள்ளனர்.
இதன்போது, இந்த வெசாக் தோரணமானது திடீரென உடைந்து வீழ்ந்துள்ளது. இதன்போது தோரணத்தின் உச்சியில் நின்றுகொண்டிருந்த இருவரும் காயமடைந்துள்ள நிலையில் காயமடைந்தவர்கள் திவுலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த வெசாக் தோரணத்தை மீண்டும் வடிவமைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
எதிர்வரும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தாமரை கோபுரம் பௌத்த கொடியிலுள்ள வர்ணங்களில் ஒளிரும் என தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாளை வியாழக்கிழமை (23) மற்றும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (24) கோபுரம் ஒளிரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தாமரை கோபுரம்
மேலும்,கொழும்பு தாமரை கோபுரத்தில் பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன் வெசாக் பண்டிகையை கொண்டாடுமாறு நிர்வாகம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதேவேளை, வெசாக் தினங்களில் பிக்சல் ப்ளூம் புத்தம் புதிய, ஊடாடும் டிஜிட்டல் கலை அனுபவத்தை அனுபவிக்கும் வாய்ப்பையும் தாமரை கோபுரம் வழங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |