முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: மகிந்த கோட்டாபயவிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
படைவீரர்களை பாதுகாத்தல், தேசிய சொத்துக்களை பாதுகாத்தல் போன்ற பணிகளை முன்னெடுக்கத் தவறினால் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் (Sri Lanka Podujana Peramuna ) எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் என்ற தேசியவாத அமைப்பு கடிதமொன்றின் மூலம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
குறித்த கடிதத்தில், “தேசத்தை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புக்களைச் செய்த படைவீரர்கள் தொடர்ந்தும் பாதுகாக்கப்பட வேண்டும்.
மகிந்த, கோட்டாபய
படைவீரர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் தொடர்பில் மகிந்த (Mahinda Rajapaksa), கோட்டாபய (Gotabaya Rajapaksa) ஆகியோர் மௌனம் காத்து வருவது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிக்கின்றது.
போரின் பின்னர் படைவீரர்களை பாதுகாப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்படவில்லை. அரசியல் இருப்பிற்காக தேசியவாத சக்திகள் வழங்கிய ஆணையை உதாசீனம் செய்யக் கூடாது.
முன்னாள் அதிபர்களான மகிந்த, கோட்டாபய மற்றும் மொட்டு கட்சி ஆகிய தரப்புக்கள் படைவீரர்களை காட்டிக் கொடுக்கக் கூடாது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிர் நீத்தவர்களுக்கு நினைவேந்தல் நடத்தப்பட்டமை அதிர்ச்சி அளிக்கின்றது.
இந்த நிகழ்வில் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதானிகள் பங்கேற்றதாகவும் இந்த விடயத்திற்கு கோட்டாபய, மகிந்த உள்ளிட்ட தரப்புக்கள் ஏன் எதிர்ப்பை வெளியிடவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கின்றது.
படைவீரர்களை பாதுகாத்தல், தேசிய சொத்துக்களை பாதுகாத்தல் போன்ற பணிகளை முன்னெடுக்கத் தவறினால் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |