பொதுத் தேர்தல் தொடர்பில் வெளிவரும் போலித்தகவல்கள் உண்மையில்லை: சரித ஹேரத்
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு முதலில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என சிலர் வெளியிட்டு வரும் கருத்துக்களில் உண்மையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் (Charitha Herath) தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாடாளுமன்றம் கலைக்கப்படாது எனவும் சரித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் (Colombo) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அதனை குறிப்பிட்டார்.
அதிபர் தேர்தல்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தேவை என்றால் நாடாளுமன்றை கலைப்பதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickramasinghe) அதிகாரம் உண்டு.
எனினும், ஒன்றிரண்டு வாரங்களில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் அதிபர் தேர்தலின் பின்னர் பொதுத் தேர்தலை தேர்தல் ஆணைக்குழுவினால் நடத்த முடியும்.
நாடாளுமன்றத் தேர்தலை நடத்த உரிய கால நிர்ணயங்கள் இல்லை என்ற போதிலும் அதிபர் தேர்தலை நடத்த கால வரையறை உண்டு.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் அதிபர் தேர்தலின் பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதாக தேர்தல் ஆணைக்குழு நீதிமன்றின் முன்னிலையில் கூற முடியும் என சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |