அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்தோனேசியாவிற்கு பயணம்
Ranil Wickremesinghe
Sri Lanka
Indonesia
By Shadhu Shanker
இந்தோனேசிய(Indonesia) அதிபர் ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் அதிபர் ரணில் விக்ரமசிங்க ((Ranil Wickremesinghe) இன்று (18) காலை இந்தோனேசியாவிற்கு பயணமாகியுள்ளார்.
'கூட்டு செழுமைக்கான நீர்' என்ற தொனிப்பொருளில் 10 ஆவது உலக நீர் மாநாடு மே 18 முதல் 20 வரை இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறவுள்ளது.
இந்த உலக நீர் மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவே அவர் இந்தோனேசியாவிற்கு சென்றுள்ளார்.
இந்தோனேசியா பயணம்
மேலும், ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி மாநாட்டில் விசேட உரையாற்றவுள்ளார்.
இதேவேளை, அதிபர் ரணில் விக்ரமசிங்க தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இந்தோனேசிய அதிபர் உள்ளிட்ட அந்நாட்டின் பல உயர்மட்ட பிரதிநிதிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..! 21 மணி நேரம் முன்
இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....
5 நாட்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்