நாட்டின் அடுத்த தேர்தல் குறித்து ரணில் இரகசிய நகர்வு...! பின்னணியில் இயக்கும் பசில்
அதிபர் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத் தேர்தல் தான் முதலில் நடத்தப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா (Dilan Perera) தெரிவித்துள்ளார்.
இதற்கு மொட்டுக் கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) ரணிலுக்கு கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இரகசியமான முறையில் ஏற்பாடு
அரசமைப்பின்படி, இந்த வருடம் கட்டாயம் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதிபர் விரும்பினால் அதற்கு முன் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் அதிகாரம் அவருக்குண்டு.
எல்லோரும் அதிபர் தேர்தல் தான் முதலில் நடத்தப்படும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், அதிபர் நாடாளுமன்றத் தேர்தலைத்தான் முதலில் நடத்துவதற்கு இரகசியமான முறையில் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றார்.
ரணிலுக்கு அழுத்தம்
ரணிலுக்கு ஆதரவு வழங்கி வரும் மொட்டுக் கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவும், (Basil Rajapaksa) நாடாளுமன்றத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும் என்று அதிபருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றார்.
நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்தினால் அரசுக்கு ஏற்படப் போகும் நன்மை பற்றி ரணிலுக்கு (ranil wickremesinghe) பசில் விளக்கிக் கூறியுள்ளார். அதன் அடிப்படையில்தான் அதிபர் மேற்படி முடிவை எடுத்துள்ளார்.
ஆனால், அவர் வெளியே அதிபர் தேர்தல்தான் முதலில் நடத்தப்படும் என்று காட்டுகின்றார் என டிலான் பெரேரா (Dilan Perera) தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |