தொடருந்து திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
நாட்டில் முன்னெடுக்கப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து வெள்ளவத்தை தொடருந்து நிலையம் வரையான பகுதியில் ஒரு பாதைக்கு தொடருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி இன்று(09) நாளை (10) மற்றும் நாளை மறுதினம் (11) ஆகிய மூன்று நாட்களுக்கு போக்குவரத்து நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொடருந்து சேவைகளில் தாமதம்
கொம்பனித்தெரு வீதி மற்றும் கொள்ளுப்பிட்டி தொடருந்து நிலையங்களுக்கு இடையில் பாலம் ஒன்றின் பராமரிப்பு பணிகள் மற்றும் நீர் வழங்கல் சபையின் குழாய் பதிக்கும் பணிகள் காரணமாகவே இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்காரணமாக கரையோர தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |