இன்று நள்ளிரவு முதல் பால் தேநீரின் விலையில் மாற்றம்
நாட்டில் பால் தேநீரின் விலை மற்றும் பால் சார்ந்த பழச்சாறுகள் சீஸ் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்க உள்ளது.
குறித்த விடயத்தை அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் (AICROA) ஹர்ஷனா ருக்ஷன் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், இன்று திங்கட்கிழமை (31) நள்ளிரவு 12.00 மணி முதல் விலைகள் அதிகரிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார் .
பால் மாவின் விலை அதிகரிப்பு
மேலும் அவர் தெரிவிக்கையில், பால் மாவின் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, பால் தேநீர் தவிர, பாலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் அனைத்து வகையான பழச்சாறுகளின் ஒரு கோப்பையின் விலை இன்று நள்ளிரவு முதல் 10 ரூபாயால் அதிகரிக்கப்படும்.
இது தவிர, பாலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் சீஸ், உள்ளிட்ட பல வகையான உணவுப் பொருட்களின் விலையும் ரூ.10 உயர்த்தப்படும் என சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளனர்.
முட்டையின் விலை
இதேவேளை, நாட்டில் வீழ்ச்சியடைந்து வரும் முட்டையின் விலையைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாயாக அதிகரிக்கப்படுமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சந்தையில் முட்டை விலை குறைந்துள்ளதன் காரணமாக முட்டை உற்பத்தியாளர்கள் கோழிகளை இறைச்சிக்காக விற்பனை செய்வதாக அந்த சங்கத்தின் தலைவர் அன்டன் நிஷாந்த அப்புஹாமி (Anton Nishantha Appuhamy) தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், முட்டைக்கான நியாயமான விலையை நிர்ணயம் செய்து முட்டை உற்பத்தியாளர்களையும் நுகர்வோரையும் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 1 வாரம் முன்
