அரிசி பிரச்சினைக்கு முற்று: மக்களுக்கு வெளிவந்துள்ள நற்செய்தி
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசி அடுத்த வாரம் கிடைக்கும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது உருவாகியுள்ள அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அதிகபட்சமாக 70,000 மெட்ரிக் டன்களுக்கு உட்பட்டு அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் அண்மையில் தீர்மானித்துள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் அரிசியில் பெரும்பாலானவை இந்தியாவில் இருந்து கொண்டுவரப்படவுள்ளதுடன், இதற்கமைய அரிசி இருப்புகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் அடுத்த வாரத்தில் நாட்டை வந்தடையும் என கூறப்படுகிறது.
அரசாங்க அனுமதி
இந்த நிலையில், அரிசி மீதான இறக்குமதி வரியை திருத்தியமைத்து, அரிசி இறக்குமதியை டிசம்பர் 4 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் அரசாங்கம் அனுமதித்து விசேட வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிட்டுள்ளது.
அத்தோடு, இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை நுகர்வோருக்கு உடனடியாக வழங்குவதற்காக துறைமுகத்திற்கு வரும் கப்பல்களில் உள்ள அரிசி 04 மணித்தியாலங்களுக்குள் விடுவிக்கப்படும் என சுங்கத் திணைக்களத்திலிருந்தும் விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |