எகிறும் முட்டை விலை - கட்டுப்படுத்த முன்வைக்கப்பட்ட ஆலோசனை
தேவைக்கு ஏற்ப போதுமான முட்டைகளை உற்பத்தி செய்ய முடியாவிட்டால், அதிகரித்து வரும் விலையை கட்டுப்படுத்த தற்காலிக நடவடிக்கையாக முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டுமென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் (ACBOA) தெரிவித்துள்ளது.
முட்டைகளை தற்காலிகமாக இறக்குமதி செய்வது, தற்போது நிலவும் முட்டை நெருக்கடிக்கு தனித் தீர்வாக இருக்கும், இதனால், ஒரு முட்டையை ரூ.30க்கு விற்கலாம் என சங்கத்தின் தலைவர் ஜெயவர்தன தெரிவித்தார்.
செயற்கை தட்டுப்பாடு
இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய முடியும் என்று அவர் தெரிவித்தார்.
தற்போதைய செயற்கை தட்டுப்பாடு பண்ணையாளர்களால் உருவாக்கப்பட்டது என்றார். முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டவுடன் செயற்கை தட்டுப்பாடும், கண்மூடித்தனமான விலை அதிகரிப்பும் குறையும் என அவர் கூறினார்.
முட்டையை நம்பிய பேக்கரி பொருட்கள்
"பெரும்பாலான பேக்கரி பொருட்கள் முட்டையை நம்பியே உள்ளன. ஆனால், ரூ.70க்கு கூட முட்டை கிடைக்காத பரிதாப நிலை உள்ளது. அதனால், கிறிஸ்மஸ் காலத்திலும், முட்டை இல்லாத நிலை தொழில்துறையை அச்சுறுத்துகிறது,'' என்றார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
