சிறையில் அடைக்கப்பட்ட முல்லைத்தீவு குடும்பஸ்தர் உயிரிழப்பு
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Keethan
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பினை சேர்ந்த உதயாணன் என்ற குடும்பஸ்தர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
வழக்கு ஒன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் கொழும்பில் வைத்து கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கடந்த 26.12.2025 அன்று அவர் உயிரிழந்துள்ளார்.
விசாரணை
கொழும்பில் கட்டுமானப்பணியில் ஈடுபடும் நிறுவனம் ஒன்றின் கணக்காளராக பணியாற்றிக்கொண்டிருந்த குறித்த குடும்ஸ்தர் கடந்த 10.12.2025 குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் (CID)கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் விசாரணையின் போது அவர் தாக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மலையக மக்களின் வருகை வடக்கு - கிழக்கிற்கு சாதகமா.. பாதகமா.. 19 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்