அவ்வாறு நடந்தால் ரிசாட் மற்றும் ஹக்கீம் பதவி விலக வேண்டும்! இம்ரான் கோரிக்கை (காணொளி)
முஸ்லிம் தலைமைகள் ஒருபக்கமும் உறுப்பினர்கள் ஒருபக்கமும் வாக்களித்தால் மக்களின் நிலை என்ன என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் (Imran Maharoof) கேள்வி எழுப்பியுள்ளார்.
மீண்டும் இவ்வாறான ஒரு சிலை ஏற்பட்டால் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் ரிசாட் பதியூதீன் மற்றும் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமும் தலைமைப் பதவியிலிருந்தும் விலக வேண்டும் எனவும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இருபதாம் திருத்தம் உள்ளிட்ட அனைத்து வாக்கெடுப்பிலும் முஸ்லிம் கட்சி தலைவர் அரசுக்கு எதிராகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாகவும் வாக்களித்திருந்தார்கள். அதன்பின் ஒழுக்காற்று நடவடிக்கை என்றார்கள். ஆனால் அதற்கு பதிலாக கட்சியின் உயர்பதவியே வழங்கப்பட்டது.
நாளைய தினம் வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் காங்கிரசின் தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான விடயம் காணொளியில்,


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 13 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்