இடமாற்ற பட்டியல் இரத்துக்கான கோரிக்கை: ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
SL Protest
Ceylon Teachers Service Union
Education
By Shalini Balachandran
கிழக்கு மாகாணக் கல்வி திணைக்களம் வெளியிட்ட ஆசிரியர் இடமாற்ற பட்டியலை இரத்து செய்ய கோரி, ஆசிரியர்களால் மாபெரும் கண்டன பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பேரணியானது, இன்று ( 14 ) அம்பாறையில் இடம்பெற்றுள்ளது.
ஒருங்கினைப்பு குழுக் கூட்டம்
கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலய ஆசிரியர்களால் அம்பாறை மாவட்ட செயலகம் முன்னால் இப்பேரணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இன்றைய அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கினைப்பு குழுக் கூட்டம் அம்பாறை கச்சேரியில் நடைபெறுகின்றது.
தீர்வு உறுதி
இந்நிலையில், இன்று நேரடியாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸிடம் ஆசிரியர்கள் தங்களுடைய பிரச்சினைகளை எடுத்து வைத்துள்ளனர்.
இதனடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இந்த விடயத்துக்கு நியாயமான தீர்வு ஒன்றினை பெற்றுத்தருவதாக உறுதி அளித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி