பாரிசில், உணர்வுபூர்வமாக நடைபெற்ற "எழுக தமிழா" நிகழ்வு (படங்கள்)

Sri Lankan Tamils Paris
By Jaso Jun 23, 2022 10:11 PM GMT
Report

"எழுக தமிழா" எழுச்சி நிகழ்வு

இலங்கைஅரசினால், காலாகாலமாக தமிழ்மக்கள்மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் இனவழிப்பிற்கு நீதிகேட்டும்,பறிக்கப்பட்டுவரும் தமிழர்களின் இறையாண்மைக்கான உரிமையை பெற்றுத்தர ஆவன செய்யக்கோரியும், திட்டமிட்டு அழிக்கப்பட்டுவரும் நமது தேசிய அடையாளங்களை நிலைநிறுத்த வேண்டியும், பிரான்ஸ் வாழ் தமிழ்த்தேசிய அமைப்புகளின் ஒன்றிணைவில் முன்னெடுக்கப்பட்ட "எழுக தமிழா" எழுச்சி நிகழ்வானது 22.06.2022, பாரிசின் République சுதந்திர சதுக்கத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினை இளையோர் தலைமையேற்று நடத்தியிருந்தமை சிறப்பான விடயமாகும். இந்நிகழ்வில் பிரான்ஸ் நகரசபைகளின் முக்கிய உறுப்பினர்கள், இனவிடுதலையை நேசிக்கும் மக்கள்,உணர்வாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

22.06.2022 மாலை மூன்று மணியளவில் ஆரம்பமாகிய இந்நிகழ்வில், பொதுச்சுடரினை la Courneuve நகரசபை உறுப்பினர் திருமதி.சுகுர்ணா ஸ்ரீகணேஸ் ஏற்றிவைத்தார். தொடர்ந்து தேசியக்கொடியேற்றல் நிகழ்வு. இதன்போது, பிரெஞ்சு தேசியக்கொடியினை Vitry sur seine நகரசபை உதவி நகரபிதா Mr. Albertino Ramaël அவர்கள் ஏற்றிவைத்தார், தொடர்ந்து எமது தேசியக்கொடிக்கீதம் காற்றலையில் ஒலிக்க, தமிழீழ தேசியக் கொடியினை திருமதி ஈழநதி அவர்கள் ஏற்றிவைத்தார்.

பட்டொளி வீசிப் பறந்த தேசியக்கொடியின் கீழ் மக்கள் பரவசமாய் நின்றிருந்தனர். அகவணக்கத்தினைத் தொடர்ந்து ஆரம்பமான நிகழ்வின் விளக்கவுரையினை, இளையதலைமுறையின் ஏற்பாட்டாளர் குலராஜ் நிகழ்த்த,அதனைத்தொடர்ந்து மூத்த கலைஞர்களின் பறையிசைப்பாடல் எழுச்சியுடன் இசைக்கப்பட்டது.

சிறப்புரைகள்

பின்னர் உரைகள் இடம்பெற்றன. ville juif நகரசபை உறுப்பினர் Mr.Guillqme de souch, vitry sur seine நகரசபை உதவி நகரபிதா Mr.Albertino Ramaël, Bondy நகரசபை உதவி நகரபிதா திருமதி Katie, Seine saint Denis மாவட்டசபை உறுப்பினர் Oldhynn PIERRE, Bondy சபையின் உதவி நகர பிதா திருமதிCathy JANKOWSKI. Bondy மாநகர சபை உறுப்பினர் பிறேமி பிரபாகரன் போன்றோர் உரையாற்றியதுடன், பிரெஞ்சு மொழியிலான உரையினை, செல்வி. அம்மு ரஞ்சித்குமார், செல்வி.இலக்கியா எட்வேர்ட் லூயிஸ், ஆகியோரும், சிறப்புரைகளினை, தமிழ் தேசிய செயற்பாட்டாளர் பொன்.நாயகன், la Courneuve நகரசபை உறுப்பினர் திருமதி. சுகுர்ணா ஸ்ரீகணேஸ், தமிழரசன், சுதன்ராஜ், Noisy le sec நகரசபை உறுப்பினர் El hadj Mahmoudba ஆகியோரும் நிகழ்த்தினர்.

நிகழ்வில் கவிஞர் வன்னியூர் குரூஸ் அவர்களின் உணர்வுக் கவிதையும், மூத்த கலைஞர்களான தயாநிதி, மயிலையூர் இந்திரன், ஆகியோரின் சிறந்த வெளிப்படுத்தலில் "நாயைக்காணவில்லை" எனும் நாடகமும் நடைபெற்றன. கூடிநின்ற மக்கள்,உணர்வாளர்களின் மனமுருக சிறப்பாக அமைந்திருந்தது அந்நாடகம்.

நமது தமிழினத்தின் மேல் மேற்கொள்ளப்பட்டது திட்டமிடப்பட்ட இனவழிப்பு எனவும் ,அதற்கான நீதி கிடைக்க பிரான்ஸ் அரசாங்கம் எமக்கு உதவி புரிய வேண்டுமெனவும், மூதாதையர் வழிவந்த எமது தேசிய அடையாளங்களை அழியவிடாது பாதுகாத்து பயன்படுத்துவதற்கும் , போரில் வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளின் நிலையையும் விடுதலையையும் பெற்றுத்தருவதற்கும் மனிதாபிமான பிரான்ஸ் அரசு தமக்குஉதவி புரியவேண்டுமெனவும் "எழுக தமிழா" நிகழ்வில் தமிழ் மக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

தொடர்ந்து நன்றியுரையினை குணா அவர்கள் வழங்க தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு 'நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும்' எனும் பாடலுடன் நிகழ்வு எவ்வித இடையூறுகளுமின்றி அமைதியாக நிறைவுபெற்றது.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016