பிரான்ஸில் எழுச்சி பெற்ற 'எழுக தமிழா' : நெருக்கடியிலும் நீதிக்காக உரிமைகோரல் (படங்கள்)
பிரான்ஸ் தலைநகர் பரிஸ் றிப்பப்ளிக் பகுதியில் இன்று பிற்பகல் முதல் மாலை வரை நீதிக்காகவும் உரிமைக்காகவும் “எழுக தமிழா” என்ற தொனிப்பொருளில் ஒன்றுகூடல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
முள்ளிவாய்கால் பேரவலத்தை நினைவு கூரும் மே 18 நிகழ்வுகளின் போது தமிழர் தாயகத்தின் தேசியக்கொடிக்கு பிரெஞ்சு காவல்துறை அனுமதி மறுத்ததை அடுத்து, அதற்கு எதிர்வினையாற்றும் வகையிலும் தமிழினத்துக்கு நீதிகோரும் வகையில் இன்றைய போராட்டம் நடத்தப்பட்டது.
தமிழினத்துக்கு நீதிகோரும் போராட்டம்
உணவு விடுதிகள் மீண்டும் வழமைக்கு
இதேவேளை, பிரான்சில் கொரோனா தாக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட உணவு விடுதிகள் மீண்டும் குறிப்பிடத்தக்க வகையில் மீட்சியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கடும் நெருக்கடியில் இருந்த உணவு சேவை கடந்த மே மாதத்தில் இருந்து வழமைக்கு திரும்பியுள்ளதாக தரவுகள் தெரிவித்துள்ளன.
பரிஸ் நகரில் இயங்கும் உணவு விடுதித் துறையில் கணிசமான ஈழத் தமிழர்களும் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.
