திடீரென பரவிய தீயினால் பயன்தரு தென்னைகள் கருகின!
Kilinochchi
Wildfire
Srilankan Tamil News
By Kathirpriya
கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியில் தும்புத்தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியதால் 50இற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் எரிந்துள்ளன.
இத்தீப்பரவல் இன்று (02) மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
இத் தும்புத்தொழிற்சாலையில் இன்று தொழில் நடவடிக்கைகள் நடைபெறவில்லை எனவும் தொழிற்சாலையில் யாரும் இல்லாத வேளையிலேயே இச்சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது.
அப்பகுதிமக்கள் கிளிநொச்சி தீயணைப்புப் பிரிவினரின் உதவியுடன் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், தருமபுரம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி