புதிய ஜனாதிபதிக்கு காத்திருக்கும் சவால் : மைத்திரி பகிரங்கம்
இந்த தேர்தலில் யார் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டாலும் அவர்களுக்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(maithripala sirisena) இன்று(21) காலை பொலன்னறுவையில்(polonnaruwa) வாக்களித்த பின்னர் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரவிருக்கும் ஜனாதிபதி பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும், அரசாங்கம் குறைந்தபட்சம் வரவிருக்கும் தேர்தலில் ரூ. 40 பில்லியனை செலவிட நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தலுக்கு தேவையான பில்லியன் கணக்கான பணம்
“இந்தத் தேர்தலுக்கு மாத்திரம் 10 பில்லியனுக்கும் அதிகமாக செலவாகும், மேலும் மாகாண சபை மற்றும் பிரதேச சபைத் தேர்தல்களுக்கும் 10 பில்லியனுக்கும் அதிகமாக செலவாகும்.
இவ்வாறான செலவுகள் மூலம் புதிய ஜனாதிபதி பொருளாதாரத்தை நிர்வகித்தல் மற்றும் பொதுமக்களுக்கு சேவைகளை வழங்குவதில் குறிப்பிடத்தக்க பிரச்சினைகளை எதிர்கொள்வார் என்றும் அவர் கூறினார்.
அரசியலில் இருந்து ஓய்வு பெறவில்லை
"நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறவில்லை, ஆனால் எதிர்காலத்தில் ஜனாதிபதி அல்லது நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட முடிவு செய்யவில்லை," என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |