புலம்பெயர் தமிழர்களை வைத்து காய்நகர்த்தும் ஐரோப்பா! இலங்கை யுத்ததால் அடைந்த பயன்
ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டின் முழுமையான நோக்கம் ஐரோப்பாவின் ஆதிக்கத்தில் இலங்கையை உள்ளடக்க வேண்டும் என்பதாகும். அதற்காக ஐரோப்பா பயன்படுத்தும் கருவியாக புலம்பெயர் தமிழர்கள் காணப்படுகிறார்கள் என முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்க (D.K.P Dassanayake) தெரிவித்துள்ளார்.
இணையத்தள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், ”அதாவது இந்திய பெருங்கடலில் தங்களின் ஆதிக்கம் மேலோங்க இலங்கை ஒரு மர்மஸ்தானமாக இருப்பதாலாகும்.
உள்நாட்டு யுத்தம்
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த 2009ஆம் ஆண்டு காலகட்டத்தில் அமெரிக்க காங்கிரஸுக்கு நிபுணர்கள் குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர். அது போருக்குப் பிறகு இலங்கையின் மறுசீரமைப்பு (recharcting of srilanka sfter war) ஆகும்.
அதில், இந்து சமுத்திர ஆதிக்கத்தில் இலங்கை முக்கிய புள்ளியாகும். அதில் எமது பலத்தை நிலை நாட்ட எமக்குள்ள பலத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எமது நாட்டில் தேசிய ஒருமைப்பாடு இல்லை என்பது பொய்யான கருத்தாகும். யுத்தம் நிறைவடைந்த சில காலத்தில் நாம் அனைவரையும் மீள குடியமர்த்தினோம்.
சிங்களவர், தமிழர் முரண்பாடுகள் ஊதி பெருப்பிக்கப்பட்டதாகும். நாட்டில் தேசிய ஒருமைப்பாடு நிலைப்பது சர்வதேச தரப்பில் விரும்பப்படாத ஒன்றாகும். அவர்களுக்கு இவை ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
எங்கள் நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தி எமக்கிருக்கும் குறைந்தளவான வளங்களையும் சூறையாடிக் கொள்வதாகும். அதற்காக எம்மிடையே பிரிவினையை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கமாகும்.
ஐ.நாவின் பங்கேற்பு
அப்போது எமக்கிருக்கும் வளங்களை பிரித்து கொள்வதற்கு எமது நாட்டில் நடக்கும் சண்டையில் அவர்கள் பலன் அடைவதே நோக்கமாகும்.
அதாவது "Responsibility to Protect" (R2P) என்ற சாசனத்தின் படி ஒரு நாட்டுக்கு தனது மக்களை பாதுகாக்க முடியாவிட்டால் ஐ.நாவின் பங்கேற்பில் அவர்களை பாதுகாப்பதற்காக தலையிட முடியும்.
அவ்வாறான ஒரு நிலைக்கு எமது நாட்டை கொண்டுவரவே முயற்சிக்கின்றனர். அல்லது தமிழர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்கவோ அல்லது புலம்பெயர் தமிழர்களின் அன்புக்காகவல்ல.
ஐரோப்பிய நாடுகளின் பிரதான குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்வதற்கே இவ்வாறான முன்னெடுப்புகள் செய்யப்படுகின்றன. இலங்கை அரசியல்வாதிகள் கூச்சலிடும் புலம் பெயர் தமிழர்கள் அல்ல.
அவர்களையும் சர்வதேசம் தங்கள் பக்கம் சார்ந்து வைத்து கொண்டே தங்களில் குறிக்கோள்களை நிறைவேற்றிக்கொள்ள மேற்கொள்ளும் பிரயத்தனமாகும்.
உங்களின் வாக்குகள் எமக்கு தேவை, உழைப்பு எங்களுக்கு முக்கியமானது என கூறும் ஐரோப்பியா தமிழர்களுக்கான தனி நாடு அவசியம் என்ற கருத்துகள் புலம்பெயர் தமிழர்களுடாக இலங்கையில் பரப்பப்படுகிறது'' என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
