வரம்பை மீறும் கச்சா எண்ணெய் விலை - நிலக்கீழ் எரிபொருட்களை தவிர்க்க நடவடிக்கை
United States of America
Crude Oil Prices Today
Dollars
By Kalaimathy
உலக சந்தையில் 4 நாட்களுக்குப் பிறகு, கச்சா எண்ணெய் விலை நேற்று (27) மீண்டும் 88 டொலர்களால் அதிகரித்துள்ளது.
குறித்த அதிகரிப்பானது கடந்த இரு மாதங்களில் பதிவான அதிகபட்ச மதிப்பாகும்.
ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை தற்போது 88 டொலர்கள் மற்றும் 60 சென்ட்களைத் தாண்டியுள்ளது.
மாற்று எரிசக்தி மூலப்பொருட்கள்
அதே நேரத்தில் அமெரிக்க WTI கச்சா எண்ணெய் விலை 82 டொலர்களை தாண்டியுள்ளது.
இதற்கிடையில், தனியார் முதலீட்டு நிறுவனங்களை மேற்கோள் காட்டி, வெளிநாட்டு ஊடகங்கள் சில உலகின் பல நாடுகளில் பணவீக்கம் காரணமாக, நிலக்கீழ் எரிபொருட்களை தவிர்த்து மாற்று எரிசக்தி மூலப்பொருட்களுக்கு மாறுவதற்கான செயல்முறை துரிதப்படுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி