டெல்லி - மும்பை ; உலகில் அதிக கட்டணம் கொண்ட விமானப் பயணமாக மாறியது
Delhi
India
Mumbai
By Pakirathan
மும்பை - டெல்லி இடையே பயணிக்க 24 மணி நேரத்துக்குள் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கான கட்டணம் இந்திய ரூபாவின் படி 14 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
இது உலகளவில் இரண்டாவது அதிகப்படியான விமான பயணக் கட்டணமாக மாறியிருக்கிறது.
அதிக கட்டணம்
உலகிலேயே அதிக விமானக் கட்டணம் கொண்ட நாடு பிரேசில் உள்ளது.
பிரேசிலில் சா பாலோ - ரியோ டி ஜெனிரியோ நகரங்களுக்கு இடையே 55 நிமிட பயணத்தை மேற்கொள்வதற்கு 24 மணி நேரத்துக்குள் விமான டிக்கெட் முன்பதிவு செய்ய இந்திய மதிப்பில் 26,800 ரூபா கட்டணம் அறவிடப்படுகிறது.
இந்தியாவில் டெல்லி - மும்பைதான் அதிகமானோர் பயணிக்கும் விமான வழித்தடமாக உள்ளது.
டெல்லி - மும்பை இடையேயான பயணக்கட்டணமானது பிரேசில் நாட்டுக்கு அடுத்தபடியாக அதிகக் கட்டணம் கொண்ட விமானப் பயணமாக மாறியுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்