நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு
sri lanka
Increase
fuel price
By Vanan
லங்கா ஐஓசி நிறுவனம் தமது அனைத்து வகையான பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளை அதிகரித்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் குறித்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது.
இதன்படி, அனைத்து வகையான டீசல் லீட்டர் ஒன்றுக்கு 15 ரூபாவும், பெற்றோல் லீட்டர் ஒன்றுக்கு 20 ரூபாவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பெற்றோல் 92 - ஒக்டேனின் புதிய விலை 204 ரூபாவாக இருக்கும், டீசலின் புதிய விலை 139 ரூபாவாக இருக்கும்.
ஐஓசி நிறுவனம் இந்த மாதத்துக்குள் மேற்கொள்ளும் இரண்டாவது எரிபொருள் விலை திருத்தம் இதுவாகும்.
எனினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதுவரை தமது எரிபொருட்களின் விலையை அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்