எரிபொருள் விற்பனை தொடர்பில் வெளியான அறிவிப்பு
Fuel Price In Sri Lanka
Economy of Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Laksi
கடந்த சில நாட்களாக எரிபொருள் விற்பனை குறைந்துள்ளதாகவும் தற்போது வெசாக் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் எரிபொருள் விற்பனை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சில நாட்களாக எரிபொருள் பாவனை அதிகரித்து வருவதால், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் வழமையை விட அதிகமான எரிபொருள் இருப்புக்களை இறக்குமதி செய்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எரிபொருள் விற்பனை
இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் எரிபொருள் விற்பனை மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாக விநியோகஸ்தர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சிங்கள, தமிழ் புத்தாண்டு தினங்களில் மட்டும் சில விற்பனை நடந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், வெசாக் நிறைவடைந்ததன் பின்னர் எரிபொருள் விற்பனை முன்பு போலவே குறையும் என எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்