உருளைக்கிழங்கு இறக்குமதி தொடர்பில் விவசாய அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை
உருளைக்கிழங்கு இறக்குமதியைக் கட்டுப்படுத்துமாறு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (22) உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டில் ஏழைகள் உணவைத் தவிர்த்து வீட்டுப் பொருட்களை விற்பனை செய்வதாகவும், ஒரு வேளைக்குக் குறைவாகவே உண்பதாகவும் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இறக்குமதியை கட்டுப்படுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிரந்தர வரி
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குக்கு நிரந்தர வரி விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.இது விலையை நிலைப்படுத்த உதவும் என்பதுடன் பற்றாக்குறை ஏற்பட்டால் வரியை நீக்கலாம் அல்லது குறைக்கலாம்.
இலங்கையின் வறியவர்கள் 2019 இல் 4 மில்லியனிலிருந்து 7 மில்லியனாக உயர்ந்து 2023 இல் சனத்தொகையில் 31 வீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாணய நெருக்கடி
அத்துடன், வரலாற்றில் நாடு மிக மோசமான நாணய நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.
பிராந்திய கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் 10,000 பேரிடம் நடத்திய ஆய்வில், நாணய நெருக்கடிக்குப் பிறகு, 33 சதவீதம் பேர் உணவைத் தவிர்த்ததும், 47 சதவீதம் பேர் தங்கள் உணவின் அளவைக் குறைத்துக்கொண்டதும் கண்டறியப்பட்டுள்ளது. ” என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |