நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுர விடுத்துள்ள எச்சரிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை நிறுத்துவேன் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
மஹரகம (Maharagama) தேசிய இளைஞர் மையத்தில் நேற்று இடம்பெற்ற ஓய்வூதியர்களின் தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 82 உறுப்பினர்கள் வாகன அனுமதிப்பத்திரத்தை கோரியுள்ளனர். இந்த நடவடிக்கையை நிறுத்துவதற்கு சாத்தியமான நடவடிக்கைகளை எடுப்பேன்.
சபாநாயகரிடம் கோரிக்கை
நாடு முழுவதும் வாகன அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், வாகன அனுமதிப்பத்திரம் கோரிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை வெளியிடுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு சிறந்த வாழ்க்கையையும் நல்லாட்சியையும் எதிர்பார்க்கும் குழுவாகிய நாங்கள் உண்மைக்கும் பொய்க்கும் உள்ள வேறுபாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |