சிரேஷ்ட பிரஜைகளுக்கு நற்செய்தி: அதிகரிக்கப்படவிருக்கும் வட்டி வீதங்கள்
சிரேஷ்ட பிரஜைகளின் கணக்குகளுக்கான வட்டி அதிகரிப்பு தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
சிரேஷ்ட பிரஜைகளின் கணக்குகளுக்கான வட்டி வீதத்தை அதிகரிப்பது தொடர்பான அறிக்கையை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு நிதியமைச்சில் கூடிய போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நிலைமைக்கு ஏற்ப வட்டி விகிதத்தை எவ்வளவு உயர்த்துவது என்பதை ஆராய்ந்து அதற்கேற்ப செயல்பட முடியும் என அமைச்சர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.
அவசியம்
அத்தோடு, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குச் சொந்தமான சுமார் 11 லட்சம் கணக்குகள் உள்ளதாகவும், அவற்றை முறைப்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஒரே நபர் பல வங்கிக் கணக்குகளை பராமரித்து வருவது, அந்தக் கணக்குகளில் பிற தரப்பினரின் பணத்தை வைப்பிலிடுவது போன்றவை தொடர்பில் இங்கு விவாதிக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |