தேங்காய் விலையில் மாற்றம் : வெளியான தகவல்
எதிர்வரும் மே மாதத்தின் பின்னர் தேங்காய் விலையில் மாற்றம் ஏற்படுமென்று எதிர்பார்ப்பதாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை (Coconut Development Authority) தெரிவித்துள்ளது.
தேங்காய் மற்றும் தேங்காய் சார் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் சில நாட்களில் ஆரம்பமாகுமென்று தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் சாந்த ரணதுங்க (Shantha Ranatunga) குறிப்பிட்டுள்ளாா்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 200 மில்லியன் தேங்காய்களை அறுவடை செய்ய முடியுமென தெங்கு ஆராய்ச்சி நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
தேங்காய் விலை அதிகரிப்பு
அறுவடை வீழ்ச்சியால் ஏற்படும் பற்றாக்குறையை நிரப்ப தேங்காய் பால், தேங்காய் பால் மா மற்றும் தேங்காய்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் தேங்காய் விலை அதிகரிப்பு என்பது தற்போது பாரிய சிக்கலை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளதுடன் தேங்காய் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தையும் அதிகம் பாதித்துள்ளது.
இவ்வாறு, தொடர்ந்து தேங்காய் விலை அதிகரிப்பதனால் வியாபார நடவடிக்கைகள் வழமைக்கு மாறாக பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தேங்காய் வியாபாரிகள் தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
