தேங்காய் தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு : வெளியான தகவல்
கடந்த வருடத்தின் மே மற்றும் ஜூன் மாதங்களுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் மே மற்றும் ஜூன் மாதங்களில் தேங்காய் அறுவடையில் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
லுணுவில தேங்காய் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Coconut Research Institute - Lunuwila) தலைவர் குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அதன்படி, கடந்த ஆண்டு 477 மில்லியன் தேங்காய்கள் அறுவடை செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
சதோசா மூலம் விநியோகம்
மேலும், இந்த ஆண்டு 555 மில்லியன் தேங்காய்கள் அறுவடை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆராய்ச்சி நிறுவன தலைவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தேங்காய் விலையை கட்டுப்படுத்த சதோசா மூலம் அடுத்த வாரம் புதிய திட்டம் தொடங்கப்படும் என்று தேங்காய் மேம்பாட்டு அதிகாரசபையின் தலைவர் சாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, பெருந்தோட்ட நிறுவனங்களின் சதோசாக்கள் மூலம் நுகர்வோருக்கு தேங்காய்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
