டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு...! நிதி இராஜாங்க அமைச்சர்
இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க (Asanka Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஏப்ரல் மாத இறுதிக்குள் இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 5.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சுமார் 8 வீதத்தால் வலுவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாட்டுக் கடன்
இது குறித்து நிதி இராஜாங்க அமைச்சரின் உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்திலே (X) அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
ரூபாயின் மதிப்பு அதிகரிப்பானது பணவீக்கத்தைக் குறைக்கவும், ஒட்டுமொத்த வாழ்க்கைச் செலவைக் குறைக்கவும் உதவுவதோடு, அரசாங்கமும் வணிகங்களும் வெளிநாட்டுக் கடனைச் செலுத்துவதை எளிதாக்குகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
இது உலகளவில் நாட்டின் நிதி பலத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் எனவும் வர்த்தக பற்றாக்குறையை குறைப்பதன் மூலம் வர்த்தக சமநிலையை மேம்படுத்தும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
The reforms have started to yield positive outcomes, reflecting significant progress in multiple areas. Sri Lanka's gross official reserves have seen a significant increase, reaching USD 5.5 billion by the end of April 2024. Additionally, the Sri Lankan rupee has appreciated by… pic.twitter.com/qMBCxhMujD
— Shehan Semasinghe (@ShehanSema) May 28, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்....! |