இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்
2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 01 ஆம் திகதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 14 இலட்சத்து 67 ஆயிரத்து 694 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இவ்வாண்டின் ஆகஸ்ட் மாதத்தின் முதல் 13 நாட்களில் 99,406 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள்
இந்த 13 நாட்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 19,572 ஆகும்.
மேலும் ஐக்கிய இராச்சித்திலிருந்து 10,970 சுற்றுலாப் பயணிகளும், இத்தாலியிலிருந்து 7,641 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 6,870 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
இதேநேரம், சீனாவிலிருந்து 6,762 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 5,877 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
