உங்களால் தான் இது சாத்தியமானது : அநுரவுக்கு பாகிஸ்தான் பாராட்டு

Colombo Anura Kumara Dissanayaka Pakistan India T20 World Cup 2026
By Sathangani Feb 17, 2026 05:17 AM GMT
Report

2026ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கொழும்பில் சுமுகமாக நடைபெறுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) மேற்கொண்ட இராஜதந்திர முன்னெடுப்புகளே காரணம் என குறிப்பிட்டு பாகிஸ்தான் அரசு நன்றிகளைத் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தானின் உள்துறை மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு அமைச்சர் மொஹ்சின் நக்வி (Syed Mohsin Raza Naqvi) நேற்று (16) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியைச் சந்தித்த போதே இதனைக் குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது குறித்து பாகிஸ்தான் தயக்கம் காட்டிய நிலையில், ஜனாதிபதி அநுரகுமார பாகிஸ்தான் பிரதமரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பின்னரே அந்தத் தீர்மானம் மாறியதாக நக்வி குறிப்பிட்டார்.

எம்.பி.க்களின் ஓய்வூதியம் மீதான விவாதம் இன்று

எம்.பி.க்களின் ஓய்வூதியம் மீதான விவாதம் இன்று

 

இந்த நிகழ்வின் உண்மையான நாயகன்

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் நக்வி, "ஜனாதிபதி பேசிவிட்டார், இனி எந்தப் பிரச்சினையும் இல்லை, நாம் விளையாட வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் என்னிடம் கூறினார்.

உங்களால் தான் இது சாத்தியமானது : அநுரவுக்கு பாகிஸ்தான் பாராட்டு | T20 World Cup 2026 Pakistan Praises Anura Kumara

உங்களால் தான் இந்தப் போட்டி சாத்தியமானது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் என சுமார் 200 கோடிக்கும் அதிகமான மக்களை இந்தப் போட்டி மகிழ்வித்துள்ளது. நீங்கள்தான் இந்த நிகழ்வின் உண்மையான நாயகன்" என ஜனாதிபதியைப் பாராட்டினார்.

கிரிக்கெட் விளையாட்டையும் தாண்டி, முதலீடு, சுற்றுலா மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு போன்ற துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயற்படுவது குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. 

பாகிஸ்தான் வழங்கிய ஆதரவு

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பாகிஸ்தான் அணியின் வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

உங்களால் தான் இது சாத்தியமானது : அநுரவுக்கு பாகிஸ்தான் பாராட்டு | T20 World Cup 2026 Pakistan Praises Anura Kumara

அத்துடன், 'டித்வா' சூறாவளி போன்ற இக்கட்டான காலப்பகுதிகளில் இலங்கை மக்களுக்கு பாகிஸ்தான் வழங்கிய தொடர்ச்சியான ஆதரவிற்கும் அவர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக நபர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக நபர் கைது

சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம் - மாணவர்களுக்கு அறிவிப்பு

சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம் - மாணவர்களுக்கு அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025