நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
Sri Lanka
Tourism
By Abi
இந்த ஆண்டில் தொடக்கத்திலிருந்து நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை எட்டு இலட்சத்தை தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களில் 68,961 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
19,822 சுற்றுலாப் பயணிகள்
இதற்கமைய, ரஷ்யாவிலிருந்து 3,560 பேரும், ஜெர்மனியிலிருந்து 2,905 பேரும், ஐக்கிய ராச்சியத்திலிருந்து 6,328 பேரும், சீனாவிலிருந்து 5,100 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 6,223 பேரும் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கூடுதலாக 19,822 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழருக்கு இழைக்கப்பட்ட போர்க்குற்றம் : இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க பின்லாந்து எம்.பி வலியுறுத்து
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்