ஹோர்முஸ் நீரிணை திறப்பை வரவேற்கும் கனடா பிரதமர்
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையேயான போர் நிறுத்தம் மற்றும் ஈரான் ஜலசந்தியை மீண்டும் திறக்கும் என்ற அறிவிப்பு ஆகிய இரண்டுமே வரவேற்கத்தக்க செய்திகள் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மார்க் கார்னி தனது X தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், இன்று காலை, ஹோர்முஸ் ஜலசந்தியைப் பாதிக்கும் வேகமாக மாறிவரும் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைமை, உலகளாவிய கடல்வழிப் போக்குவரத்து, எரிசக்தி சந்தைகள் மற்றும் முக்கிய விநியோகச் சங்கிலிகளில் ஏற்படும் கடுமையான இடையூறுகள் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோருடன் நான் பேசினேன்.
போர் நிறுத்தம்
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையேயான போர் நிறுத்தத்தையும், ஈரான் ஜலசந்தியை மீண்டும் திறக்கும் என்ற அறிவிப்பையும் நாங்கள் வரவேற்கிறோம்.
This morning, I spoke with fellow leaders, including @EmmanuelMacron and @Keir_Starmer, about the rapidly evolving security and economic situation affecting the Strait of Hormuz, including severe disruptions to global maritime traffic, energy markets, and critical supply chains.…
— Mark Carney (@MarkJCarney) April 17, 2026
சமீபத்திய பதிலடித் தாக்குதல்களையும் பொருளாதார நெருக்கடிகளையும் எதிர்கொண்ட வளைகுடா கூட்டாளிகளுடன் கனடா முழுமையாக ஒற்றுமையாக நிற்கிறது.
மேலும், இந்த அத்தியாவசிய வழித்தடத்தின் வழியாகப் பாதுகாப்பான மற்றும் நம்பகமான போக்குவரத்தை மீட்டெடுப்பதற்காக, ஒருங்கிணைந்த இராஜதந்திர மற்றும் திட்டமிடல் முன்னெடுப்புகளை முன்னெடுத்துச் செல்லும் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவின் முயற்சிகளை வரவேற்கின்றது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |