தமிழர் பகுதியில் இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் கைது
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நபர் ஒருவரிடமிருந்து 4,990,000 ரூபாயை மோசடி செய்தமை தொடர்பில் இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி காவல் நிலையத்தில், அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளைத் தொடங்கியிருந்தனர்.
அதன்படி நடத்தப்பட்ட தீவிர விசாரணையை அடுத்து, நேற்று (16) மதியம் இந்த குற்றச்சம்பவத்துடன் தொடர்புடைய, நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதி மோசடி
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிதி மோசடி குறித்து கிளிநொச்சி கோட்ட விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் மாணவர்களைக் குறிவைத்து
யாழில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்துப் போதைப்பொருட்களை விற்பனை செய்துவந்த இருவர், பொதுமக்களின் தகவலுக்கமையக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் 45 மற்றும் 49 வயதுடைய அல்லைப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாகக் குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அல்லைப்பிட்டி பகுதியின் இரு வேறு இடங்களில் வைத்து இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |