ரஷ்ய மீதான அமெரிக்காவின் தடை..! ட்ரம்ப் கொடுத்த கால அவகாசம்
கடல் மார்க்கமாக கொண்டு செல்லப்படும் ரஷ்ய (Russia) எண்ணெய் மற்றும் பெற்றோலிய தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கு ட்ரம்ப் நிர்வாகம் சலுகைக் காலத்தை நீடித்துள்ளதாக அறிவித்துள்ளது.
ட்ரம்ப் நிர்வாகம் வெள்ளிக்கிழமை சுமார் மேலும் ஒரு மாதத்திற்குப் புதுப்பித்துள்ளது.
இதன்படி, அமெரிக்க நேரப்படி நேற்று முதல் மே 16 ஆம் திகதி வரை ரஷ்ய எண்ணெயைக் கொள்வனவு செய்வதற்கு அமெரிக்க திறைசேரி திணைக்களம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
ரஷ்ய எண்ணெயைக் கொள்வனவு
ரஷ்ய எண்ணெய்க்கான தற்காலிக பொருளாதாரத் தடை விலக்கை இனிமேல் நீட்டிக்கப் போவதில்லை என அமெரிக்கா கடந்த புதன்கிழமை (15) அறிவித்திருந்த பின்னணியில், இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளமை முக்கியத்துவத்தைப் பெறுகின்றது.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரின் போது கடுமையாக உயர்ந்த உலகளாவிய எரிசக்தி விலைகளைக் கட்டுப்படுத்தும் நிர்வாகத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஆசிய நாடுகள், மாற்று எரிசக்தி விநியோகங்களைச் சந்தைகளுக்குச் சென்றடைய அனுமதிக்குமாறு வாஷிங்டனை வலியுறுத்தியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |