இழுபறியில் ஹோர்முஸ் நீரிணை திறப்பு - சீனாவின் நிலைப்பாடு குறித்து டிரம்ப் போட்ட பதிவு
ஹோர்முஸ் நீரிணையின் தற்போதைய நிலை குறித்து சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் "மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சீனாவில் நடைபெறவுள்ள தமது சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயத்தை அவர் தனது ட்ரூத் சமூக ஊடக பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பல சாதனைகள்
சீனாவில் நடைபெறும் நமது சந்திப்பு ஒரு சிறப்பானதாகவும், ஒருவேளை வரலாற்றுச் சிறப்புமிக்கதாகவும் இருக்கும்.

ஜனாதிபதி ஷியுடன் இருப்பதை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் — பல சாதனைகள் நிகழ்த்தப்படும்!" என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், ஈரான் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் கூறிய ஏழு கருத்துக்களும் “பொய்யானவை” என்று கூறியதுடன் ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை “திறந்திருக்காது” என்றும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |