வந்து குவியும் சுற்றுலா பயணிகள் -வருமானமும் அதிகரிப்பு
Sri Lanka Tourism
Tourism
Diana Gamage
By Sumithiran
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் 7 இலட்சத்து 63 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் சுமார் 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில்

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 205 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிபர் ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.
கடந்த மாதத்தில் மாத்திரம் சுமார் ஒரு இலட்சத்து 38 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி