சந்தையில் அதிகரித்துள்ள அரிசி விலை : விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்
அரிசி சந்தைப்படுத்தல் சபையினால் அரிசியை கொள்வனவு செய்ய ஆரம்பித்ததன் பின்னர் சந்தையில் அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சு (Ministry of Agriculture) தெரிவித்துள்ளது.
இந்த வருடத்திற்கான நெல் கொள்வனவுக்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு 6000 மில்லியன் ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் முதற்கட்டமாக 500 மில்லியன் ரூபா நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
நெல் சந்தைப்படுத்தல்
விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதற்காக கிட்டத்தட்ட 36 களஞ்சியசாலைகள் திறக்கப்பட்டுள்ளன ஆனால் இதுவரை விவசாயிகள் 1,00,000 மெற்றிக் தொன் நெல்லை நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு விற்பனை செய்துள்ளதாக சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொட தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நெல் சந்தைப்படுத்தல் சபையினால் நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்பட்டதையடுத்து தனியார் துறையினர் அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இதனால் கிரிசம்பா நெல்லின் விலை 105 தொடக்கம்110 இற்கு இடையில் இருந்ததாகவும் தற்போது 130 ரூபாவை தாண்டியுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |