பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!
புதிய இணைப்பு
செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 20ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, அனைத்து பாடசாலைகளும் வழமை போன்று எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாக்கெடுப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 18 ஆம் திகதி பாடசாலை முடிவடையும் நேரத்திற்கு பின்னர் கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு வசதியாக பாடசாலைகளை மூடுவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிடமிருந்து கல்வி அமைச்சுக்கு (Ministry of Education ) முறையான கடிதம் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குப் பின்னர் வாக்கு எண்ணும் நிலையங்களைத் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அத்தோடு, வாக்குப்பதிவு மையங்களாக நியமிக்கப்பட்ட பாடசாலைகள் இம்மாதம் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் தயார்படுத்தப்படும் என்று ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பாடசாலை விடுமுறை வழங்குவது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லையென கல்வியமைச்சு (Ministry of Education) தெரிவித்துள்ளது.
தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கையை ஆராய்ந்து பாடசாலை விடுமுறை தொடர்பான திட்டமிடல்கள் முன்னெடுக்கப்படுமென அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தேசிய தேர்தல் ஆணைக்குழு ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சை
இதனடிப்படையில், வாக்கெண்ணும் நிலையங்களை தயார்படுத்தும் நடவடிக்கைகள் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடைந்த பின்னர் ஆரம்பிக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகளை எதிர்வரும் 19 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் தயார்படுத்த தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
மேலும், இது தொடர்பில் கல்வியமைச்சுடன் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |