மாரடைப்பின் காரணமாக அதிகரிக்கும் இளைஞர் மரணம்
Colombo National Hospital
Heart Attack
Diabetes
By Kathirpriya
கடந்த மூன்று மாதங்களில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண விசாரணை நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட 1500 பிரேத பரிசோதனைகளில் சுமார் 100 பேர் மாரடைப்பு மற்றும் நீரிழிவின் காரணமாக உயிரிழந்துள்ளதாக மரண விசாரணை அதிகாரி சட்டத்தரணி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார்.
இவர்கள் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மூன்றில் ஒரு பங்கு
மேலும் 50 தொடக்கம் 60 வயதுக்குட்பட்டவர்களில் 200 இறப்புகள் மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோயினால் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த மூன்று மாத காலப்பகுதியில் ஏற்பட்ட திடீர் மரணங்களில் மூன்றில் ஒரு பங்கு மாரடைப்பின் காரணமாக ஏற்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.
மாரடைப்பில் இறப்பவர்களில் இளைஞர்கள் அதிகளவு எண்ணிக்கையில் இருப்பதாகவும் , இளைஞர்கள் இறக்கும் வீதம் அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
முதலாம் ஆண்டு திவச அழைப்பிதழ்