பாடசாலைகளுக்குள் அதிகரித்துள்ள போதைப்பொருள் பரவல்! அரசாங்கத்தின் விசேட நடவடிக்கை
Sri Lanka Police Investigation
schools
By Dharu
போதைப்பொருள் பாவனைகள் மற்றும், அதன் விநியோகம், கொழும்பு உள்ளிட்ட நகர்புர பாடசாலைகளுக்கு மட்டுமல்லாமல், கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் பரவியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜேபால குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி எதிர்வரும் காலங்களில் பாடசாலைகளில், போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்காக ஒரு சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
குருநாகலில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அமைச்சர் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.
சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள்
அத்தோடு, தற்போது சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் சுமார் 70% பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதுபோன்ற போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சுமார் 40,000 கைதிகள் தற்போது சிறையில் உள்ளனர் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22
3ம் ஆண்டு நினைவஞ்சலி