நாட்டில் அதிகரித்துள்ள வேலைவாய்ப்பு வீதம்
இலங்கையில் பண்டிகைக் காலத்தையொட்டி நிறுவனங்களுக்கு புதிய பணியாளர்களை உள்வாங்குதல் காரணமாக நாட்டில் வேலைவாய்ப்பு வீதம் அதிகரித்துள்ளது.
அதன்படி கடந்த ஜனவரி மாத்தில் 48.5 சதவீதமாக காணப்பட்ட வேலைவாய்ப்பு வீதம் பெப்ரவரி மாதத்தில் 51 சதவீதமாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அத்துடன், பெப்ரவரி மாதத்தில் பணிகளுக்கான இலங்கை கொள்வனவாளர் முகாமையாளர் சுட்டெண் 53 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலத்தில்
மேலும் போக்குவரத்து மற்றும் நிதிச் சேவைகளின் துணைத் துறைகளிலும் மேம்பாடுகளை அவதானிக்க கூடியதாக உள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதேவேளை, நிலுவையிலுள்ள பணிகள் பெப்ரவரி காலப்பகுதியில் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அடுத்துவரும் மூன்று மாதங்களுக்கான தொழில் நடவடிக்கைகளுக்கான எதிர்பார்க்கைகள் வரவிருக்கும் புத்தாண்டு மற்றும் ரமழான் பருவகாலங்கள் காரணமாக பெப்ரவரியில் தொடர்ந்தும் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |