அதிகரிக்கப்பட்டது லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் - லிட்ரோ நிறுவனம்!
லிட்ரோ எரிவாயு நிறுவனம் புதிய விலை அதிகரிப்பினை வெளியிட்டுள்ளது.
இன்று, நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த விலைத் திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, அனைத்து வகையான எரிவாயு சிலிண்டர்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய விலைகள்
12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 334 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கமைய புதிய விலையாக 4,743 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 134 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,904 ரூபாவாகும்.
அதேசமயம், 2.3 கிலோகிராம் எடைகொண்ட சமையல் எரிவாயுவின் விலை 61 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 883 ரூபாவாகும்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
5 நாட்கள் முன்