புகையிரத கட்டண திருத்தம் - இன்று முதல் நடைமுறை
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Sri Lanka Railways
By Vanan
புகையிரத கட்டண திருத்தம்
இன்று (23) முதல் புகையிரத கட்டண திருத்தம் நடைமுறைக்கு வரும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 10 ரூபாவாக இருந்த குறைந்தபட்ச கட்டணம் 20 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
பயணிகள் போக்குவரத்தைத் தவிர, சரக்கு போக்குவரத்திற்கான கட்டணங்களும் திருத்தப்பட்டுள்ளன.
பேருந்து கட்டணத்தில் பாதியாக இருக்கும்
புகையிரத கட்டணம் பேருந்து கட்டணத்தில் பாதியாக இருக்கும் வகையில் திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், புதிய புகையிரத கட்டண திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதை தவிர்த்துக் கொள்வதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.
