அதிபரின் தேசிய பாதுகாப்பு சிரேஷ்ட ஆலோசகரின் யாழ் வருகை - குவிக்கப்பட்டுள்ள இராணுவம்!
அதிபரின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும், அதிபர் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்க மற்றும் இலங்கை இராணுவத் தளபதி விக்கும் லியனகே உள்ளிட்டோர் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை விஐயம் செய்தனர்.
2022/2023 ஆம் ஆண்டின் காலபோக அரசின் நெல் கொள்வனவு மற்றும் இருப்பினை விநியோகித்தல் நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான இரண்டாம் கட்ட அரிசி பகிர்ந்தளித்தல் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
நிகழ்வு
இந்நிலையில், குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்காக அதிபர் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்னாயக்க மற்றும் இலங்கை இராணுவத் தளபதி விக்கும் லியனகே ஆகியோர் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளனர்.
குறித்த வருகையினால், யாழில் வீதிகளில் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, நிகழ்வு நடைபெறும் இடங்களிலும் முப்படையினர் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.





